பழமையான ‘கொடை கல்வெட்டு’ கண்டெடுப்பு
பழமையான ‘கொடை கல்வெட்டு’ கண்டெடுப்பு;
திருப்பரங்குன்றம்
மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்களான ராஜகோபால், பிறையா ஆகியோர் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தரையின் மேற்பரப்பில் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் குறித்து கள ஆய்வில் ஈடுபட்டனர். சரவண பொய்கை கிரிவல சுற்றுப்பாதையின் இடது புறத்தில் நன்கொடை தொடர்பான கல்வெட்டை கண்டனர். அதில் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியை குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் பலகையில் தமிழ் எழுத்துக்களில் 26 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. நான்கு அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்டுள்ள இந்த கல்வெட்டானது 24 மனை தெலுங்குசெட்டியார் உறவின்முறை கட்டிடத்தின் உட்புறத்தில் அமைந்துள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினை சார்ந்தவர்கள் கிணறு தோண்டிக்கட்ட வழங்கிய தர்மம் தொடர்பான கல்வெட்டாகும். இத்தகையகல்வெட்டு தகவலை தமிழ்நாடு தொல்லியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற மதுரையைச் சேர்ந்த முனைவர் சாந்தலிங்கம்உதவியுடன் படிக்கப்பட்டது. இந்த கொடை கல்வெட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தரிசனம் செய்யும் கிரிவல சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளதால் கிரிவலம் பயணத்தின் போது பொதுமக்கள் நலனுக்காக குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், பக்தர் குளிக்கவும் கிணறு நிர்மாணித்திருக்க வேண்டும் என்பதைஅறிய முடிகிறது.