புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து சாவு

புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து சாவு;

Update:2021-11-22 21:21 IST
பேரூர்

கிரிக்கெட் விளையாடிய போது புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

புதுமாப்பிள்ளை

கோவை ஆர்.எஸ்.புரம், காமராஜபுரம், 5- வது வீதியை சேர்ந்தவர் சூரியதினேஷ் (வயது 28). 

இவர் தனியார் வங்கிக்கு பணம் வசூலித்து கொடுக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

இந்த நிலையில், சூரியதினேஷ், தனது தம்பி கவுதம்நவீன் (24) என்பவ ருடன் பச்சாபாளையம் அருகே ரங்காபுரம் விளையாட்டு மைதானத் துக்கு நேற்று முன்தினம் சென்றார். 

அங்கு அவர், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்.

மயங்கி விழுந்தார்

அப்போது சூரிய தினேசுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுதம்நவீன் மற்றும் நண்பர்கள், அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினர். 

இதனால் உடல்நிலை சீரானதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் மீண்டும் விளையாட தொடங்கினார். 

அப்போது சூரியதினேஷ் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சூரியதினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்