உரிமையாளர் தூக்கி சென்ற கன்று குட்டியின் பின்னால் 3 கி.மீ. தூரம் ஓடிய எருமை மாடு

மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் இவரது எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. உரிமையாளர் தூக்கி சென்ற கன்று குட்டியின் பின்னால் 3 கி.மீ. தூரம் ஓடிய எருமை மாடு.

Update: 2021-11-23 12:40 GMT
சென்னை போரூரை சேர்ந்தவர் பிரசாந்த் மோகன். இவர், சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் இவரது எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. இதையறிந்த மாட்டின் உரிமையாளர், கன்றுக்குட்டியை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வீட்டுக்கு தூக்கிச்சென்றார்.

இதைக்கண்ட அந்த எருமை மாடு, தனது கன்று குட்டியை பிரிய மனமின்றி உரிமையாளர் மோட்டார்சைக்கிளில் தூக்கிச்சென்ற தனது குட்டியின் பின்னால் ஓடியே சென்றது. மோட்டார்சைக்கிள் வேகமாக செல்லும் இடங்களில் வேகமாகவும், மெதுவாக செல்லும் இடங்களில் மெதுவாகவும் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனது கன்றுகுட்டி பின்தொடர்ந்தபடி ஓடிச்சென்ற எருமை மாட்டின் தாய் பாசத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்