அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்- மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அரசு பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் திருமலைமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Update: 2021-11-23 21:39 GMT
ஈரோடு
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அரசு பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் திருமலைமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தில் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அரசு பள்ளிக்கூடத்தில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் திருமலை மூர்த்தி (வயது 49). இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் திருமலை மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். இவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பாலியல் தொல்லை தொடர்பாக ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதுடன், பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து தலைமை ஆசிரியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் திருமலை மூர்த்தியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து ஆசிரியர் திருமலை மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்