பொள்ளாச்சியில் பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

பொள்ளாச்சியில் பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

Update: 2021-11-24 16:07 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகேபலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். 

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  இரவு பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் கன மழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையின் காரணமாக வேட்டைக்காரன்புதூர் தெற்கு மேட்டு தெருவில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அவர்கள் அவதியடைந்தனர். 

இதையடுத்து பொதுமக்கள் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. மழைநீரில் புத்தக பைகளும் நனைந்தன. அவற்றை நேற்று மாணவர்கள் காய வைத்தனர்.   

வெள்ளப்பெருக்கு 

மேலும் மழை காரணமாக பாலாறு, ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இடி, மின்னலுடன் பெய்த மழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 2014 கன அடி நீர் வந்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணையில் இருந்து வினாடிக்கு 1973 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்