ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2021-11-26 00:49 GMT
ஈரோடு
ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சாலையோர ஆக்கிரமிப்பு
ஈரோடு பழைய பூந்துறை ரோட்டில் வாராந்திர ஜவுளி சந்தையும், ஏராளமான வணிக நிறுவனங்களும், வங்கிகளும் உள்ளன. இந்த ரோட்டில் ஏராளமான வியாபாரிகள் விளம்பர பதாகைகளை வைத்தும், சிலர் சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை அமைத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக ஜவுளி சந்தை கூடும் நாட்களான திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
அகற்றம்
இதைத்தொடர்ந்து பழைய பூந்துறை ரோட்டில் உள்ள வியாபாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில வியாபாரிகள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒரு சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை, மாநகராட்சி அதிகாரிகள் பழைய பூந்துறை ரோட்டில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த மேற்கூரை, ரோட்டில் வைக்கப்பட்டிருந்த கடை உரிமையாளர்களின் பொருட்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு, மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்