நகை திருடியதாக பெண் மீது வழக்கு

நகை திருடியதாக பெண் மீது வழக்கு;

Update:2021-11-26 21:18 IST

கோவை

கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 75). இவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது

எனது வீட்டிற்கு அருகே விருதுநகரை சேர்ந்த செந்தில்குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்து வருகிறார். 

அவர் தனது தொழில் தேவைக்காக என்னிடம் ரூ.17 லட்சம் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை இதுவரை திருப்பி தர வில்லை. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்குமாரி  எனது வீட்டில் இருந்த 48 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்று விட்டார். 

இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து நகையை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

புகாரின் பேரில் காட்டூர் போலீசார் செந்தில்குமாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்