16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-11-29 21:37 IST
ஈரோடு சூரம்பட்டி நேதாஜிரோடு ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 31). பெயிண்டர். திருமணமான இவர் கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஸ்வநாதன் ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார். அந்த சிறுமிக்கு அவர் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விஸ்வநாதன் அந்த சிறுமியை கடத்தி சென்றது உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஈரோட்டில் தங்கியிருந்த விஸ்வநாதனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அந்த சிறுமியையும் போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்