காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
மதுரை மாவட்டத்தில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை ஆனது.;
மதுரை,
மதுரை மாவட்டத்தில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை ஆனது.
காய்கறி விலை உயர்வு
தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக விலை குறைந்தது. இதற்கிடையே, காய்கறிகளின் விலை நேற்று மீண்டும் திடீரென உயர்ந்தது.
இதனால், சில்லறை விலையில் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்ற தக்காளி நேற்று கிலோ ரூ.80க்கு விற்பனையானது. ரூ.30-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.100-க்கும், ரூ.30க்கு விற்ற மல்லி கிலோ ரூ.150-க்கும், ரூ.40க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.80-க்கும் விற்பனையானது.
இல்லத்தரசிகள் கவலை
கத்தரிக்காய் கிலோ ரூ.120க்கு விற்பனையானது. உருளைக்கிழங்கு ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.40, ரூ.50க்கும், பெரிய வெங்காயம் (பல்லாரி) ரூ.30-ரூ.40க்கும் விற்பனையானது. இதில் தக்காளி மழை தொடங்கியவுடன் கிலோ ரூ.120க்கும், பின்னர் படிப்படியாக குறைந்து ரூ.40 வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலை அடைய ைவத்து உள்ளது. தொடர் மழை காரணமாக செடிகள் அழுக தொடங்கியதன் காரணமாக தான் விலை உயர்வுக்கு காரணம். அதோடு கார்த்திகை மாதம் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் விரதம் கடைபிடிப்பதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.