1 டன் குட்கா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது

1 டன் குட்கா பறிமுதல் குடோன் உரிமையாளர் கைது;

Update:2021-12-01 21:30 IST
1 டன் குட்கா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும், புகையிலை பொருட்களை ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த விற்பனை குடோனில் இருந்து வாங்கி வருவதாக கூறினார்.

 இதையடுத்து காட்டூர் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த பூமேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்