காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரதராஜ பெருமாள் ரத்தின அங்கி தரிசனம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை ஒட்டி தாத தேசிக சாற்று முறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2021-12-05 11:39 GMT
உற்சவத்தை யொட்டி வரத ராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்படும். ரத்தின அங்கி அணிவிக்கப்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரத்தில் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் ரத்தின அங்கி அலங்காரத்தில் ஸ்ரீ தேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் மேள தாளங்கள் முழங்க கோவில் வளாக பிரகாரத்தில் உலா வந்தார்.

உலா வந்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்