திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-12-06 02:13 IST
பெருந்துறை
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசை வார்த்தை
பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் 19 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் பழகினார். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி பலமுறை உடல் உறவு கொண்டதாக தெரிகிறது. 
கர்ப்பம்
இந்த நிலையில் அந்த மாணவி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த மாணவியை அவருடைய பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. 
கைது
இதனிடையே இதுபற்றிய தகவல் ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பொறுப்பாளர் நேசமணிக்கு கிடைத்தது. தகவல் கிடைத்ததும் அவர் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்