நகைப்பட்டறையில் தொழிலாளி தற்கொலை

நகைப்பட்டறையில் தொழிலாளி தற்கொலை;

Update:2021-12-06 22:27 IST
கோவை

கோவையில் நகைப்பட்டறையில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொழிலாளி தற்கொலை 

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பிந்தி மாஜி. இவருடைய மகன் பாப்பு மாஜி (வயது 19). இவர் கோவை தெலுங்கு வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்த அவர் திடீரென்று கழிவறை சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த சக தொழிலாளர்கள் அங்கு சென்று கதவை தட்டினார்கள். ஆனால் திறக்கப்படவில்லை. உடனே அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது பாப்பு மாஜி தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். 

ஆன்லைன் சூதாட்டம் 

இது குறித்து தகவல் அறிந்த வெறைட்டிஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாப்பு மாஜியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் போலீசார் பாப்பு மாஜி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் அதிகளவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. எனவே அவர் இந்த சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்