தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி

தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2021-12-07 16:34 IST
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு விதைகள், இடுபொருட்கள், ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு 40 பயனாளிகளுக்கு விதைகள், இடுபொருட்கள், ஊட்டச்சத்து தளைகளை வழங்கினார். இதில் தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்