கிணத்துக்கடவு பகுதியில் கடைகளில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது

கிணத்துக்கடவு பகுதியில் கடைகளில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது;

Update:2021-12-09 00:17 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் கடைகளில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொடர் திருட்டு

கிணத்துக்கடவு பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி சக்கலாம்பாளையம் ரோட்டில் உள்ள மருந்துகடை உள்பட 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்நிலையில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று  அரசம்பாளையம் பிரிவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சிக்கலாம்பாளையம் உதயம் நகரை சேர்ந்த கார்த்தி (வயது 23) என்பதும், கடைகளின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது.

 இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் கிணத்துக்கடவு பெரியார் நகரை சேர்ந்த ராசுகுட்டி என்ற ராஜ்குமார் (21), கிருஷ்ணசாமிபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கிணத்துக்கடவு பஸ் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த ராஜ்குமார், தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்