கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update:2021-12-09 16:21 IST
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முதல்-அமைச்சரால் சமூக வகுப்பு நல்லிணக்கத்திற்காக கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் 2022-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மத கலவரத்தின் போது அடுத்த மதத்தை சேர்ந்தவர்களின் உயிரை காப்பாற்றுதல், உடைமைகளை பாதுகாத்தல் மற்றும் சமூக தொண்டு புரிபவர்கள், நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர்களின் கருத்துருக்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் என்ற முகவரியில் இன்று (வியாழக்கிழமை) -க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்