முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி

முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி;

Update:2021-12-09 21:34 IST
தர்மபுரி, டிச.10-
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முப்படை தளபதி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். இவர்ளது மறைவுக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாப்பாரப்பட்டியில் பா.ஜ.க. சார்பில் முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளையராஜா தலைமை தாங்கினார். பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.இமானுவேல் கலந்து கொண்டு பிபின் ராவத் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், தொழிலதிபர் ராஜ்கண்ணு, பாப்பாரப்பட்டி நகர பொறுப்பாளர் குட்டிசிவக்குமார், நிர்வாகிகள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூர், மொரப்பூர்
கடத்தூரில் கிரீன்பார்க் பள்ளி வளாகத்தில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிரீன்பார்க் கல்வி நிறுவனங்களின் செயல் அலுவலர் எம். ராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பூவிழி முனிரத்தினம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மொரப்பூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பிபின் ராவத் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மொரப்பூர் பஸ் நிலையத்தில் நடந்தது. பா.ஜ.க. மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தலைவர் எஸ்.ராஜசேகர் தலைமை தாங்கி, பிபின் ராவத் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பா.ஜ.க. கிழக்கு ஒன்றிய தலைவர் சி.பிரபு, மொரப்பூர் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் வெற்றிவேல், வர்த்தகர் அணி ஒன்றிய தலைவர் விஜயராஜ், நிர்வாகிகள் பி.காந்தி, ஜடையம்பட்டி எம்.சரவணன், சபரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்