ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.;

Update:2021-12-12 18:19 IST
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் வடமங்கலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமங்கலம் சுடுகாடு அருகில் 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்தனர். 

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (வயது 23), மற்றும் வடமங்கலத்தை சேர்ந்த விஜய் (23) என்பதும், இருவரும் கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்