வழிப்பறி செய்த 3 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், பண்ருட்டி அருகே திருஞானம் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து திருஞானம் கொடுத்த புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வைப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (28), மாத்தூர் காரணிதாங்கலை சேர்ந்த ரிஷாத் (வயது 21), செரப்பணஞ்சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த அபிமன்யூ (20) ஆகிய 3 பேர் வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் திருடிய செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.