மாநகராட்சி பள்ளியில் 52 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்
மாநகராட்சி பள்ளியில் 52 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்;
கோவை
கோவை மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப கூடுதல் வசதி செய்ய திட்டமிடப்பட்டது.
இதற்காக தமிழக அரசு ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கியது. அதனுடன் தனியார் நிறுவனம் ரூ.26 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ.52 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது.
இதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். பின்னர் அவர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து அவர், கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் 600 மீட்டர் தூர பாதாள சாக்கடை பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் அவர், அங்கு ரூ.61 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ள சாலை, உப்பிலிபாளையம் மாநக ராட்சி நடுநிலைபள்ளியில் ரூ.15 லட்சத்தில் வகுப்பறைகள் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.