இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்

இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்;

Update:2021-12-13 20:36 IST
துடியலூர்

இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்களாக துடியலூர் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் 13 பேர் மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்து சுதந்திரம் பற்றி பேசும் தி.மு.க., மாரிதாஸ், கிஷோர்சாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து வருகிறது. 

இதில், கிஷோர்சாமி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். மாரிதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது.  

இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 

பிரதமர் மோடியை அவதூறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படுவது இல்லை. 

மதசார்பின்மை என்று கூறிக் கொண்டு கிருஸ்தவர் கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. 

இந்து கோவில்களின் வருமானத்தை வைத்து தமிழக அரசு கல்லூரி நடத்த ஏற்பாடு செய்கிறது.  அப்படி செய்யும் போது அதில் ஆன்மிக கல்வி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்