புழல் சிறை கைதி திடீர் சாவு

சிறையில் இருந்த கைதிக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கைதி முத்துசாமி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.;

Update:2021-12-14 15:44 IST
கடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி(வயது 36). இவர், கடந்த மே மாதம் செங்குன்றம் போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்த முத்துசாமிக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதற்காக புழல் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவரை, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே கைதி முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதி முத்துசாமி நெஞ்சு வலியால்தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்