சென்னை மாநகராட்சி சார்பில் மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;

Update:2021-12-16 15:32 IST
இந்த முகாமில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் கலந்துகொண்டு கொரோனாவின் அறிகுறிகள், பரவாமல் தடுக்கும் முறைகள், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம், முறையாக முககவசம் அணிதலின் அவசியம் மற்றும் ஒரு தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

பின்னர், இந்தியன் எண்ணெய் நிறுவனம் சார்பில் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் துருப்பிடிக்காத சில்வர் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் எண்ணெய் நிறுவனம் செயல் இயக்குனர் எஸ்.எஸ்.சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்