கிணத்துக்கடவு கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை

கிணத்துக்கடவு கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை;

Update:2021-12-16 20:45 IST
கிணத்துக்கடவு

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்மன் கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு காலை 5.30 மணிக்கு முதற்கால பூஜை நடைபெற்றது. அதனைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7.30 மணிக்கு 3-ம் காலபூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் கிணத்துக்கடவு சிவலோகநாதர ்கோவில், பொன்மலை வேலாயுதசாமி கோவில் மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்