கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.;

Update:2021-12-18 02:34 IST
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் வனத்துைற, வருவாய்த்துறை, காவல்துறை என 3 சோதனை சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் வரும் அனைத்து வாகனங்களும் இந்த சோதனை சாவடிகளை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது. அதனால் அங்கிருந்து வரும் வாகனங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்