பெண் கேட்டு தகராறில் ஈடுபட்ட தொழிலாளி கைது
பெண் கேட்டு தகராறில் ஈடுபட்ட தொழிலாளி கைது;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக தெரிகிறது. இதற்கிடையில் உறவினரான சந்தீப்குமாரிடம் சென்று அவரின் மகளை தனக்கு திருமண செய்து வைக்குமாறு கூறி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றவே மணிகண்டன், சந்தீப்குமாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.