ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல்-லே அவுட்டில் ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழற்தாங்கள் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு, சுவாமிக்கு வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு என பல்வேறு கனிகள், இளநீர் படைக்கப்பட்டு சிறப்பு பணிவிடை நடந்தது. முன்னதாக ஸ்ரீமன்நாராயணசுவாமிக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, உகப்படிப்பு மற்றும் அருவாக்கு சொல்லுதல் நடந்தது.
மதியம் 1 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் அய்யாவழி பக்தர்கள் செய்து இருந்தனர்.