சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பலில் பூச்சி மருந்து தெளித்த தொழிலாளி சாவு

சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பலில் பூச்சி மருந்து தெளித்தபோது அதிகப்படியான நெடியால் மயங்கி விழுந்து இறந்தார்.;

Update:2021-12-23 15:27 IST
சென்னை துறைமுகத்தில் இருந்து வியட்நாம் நாட்டுக்கு கொண்டு செல்வதற்காக சரக்கு கப்பலில் பல டன் எடையுள்ள சோளம் ஏற்றப்பட்டு இருந்தது. அவை கெடாமல் இருப்பதற்காக தொழிலாளர்களான விருதுநகரைச் சேர்ந்த ராமசாமி (வயது 43) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (43) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சரக்கு கப்பலில் தானியங்களை பதப்படுத்தும் ஒவ்வொரு அறையாக மருந்து தெளித்தபடி இருந்த இருவரும் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கப்பல் ஊழியர்கள், இருவரையும் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார். ஜெகதீசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பூச்சி மருந்து ெதளித்தபோது அதிகப்படியான நெடியால் இருவரும் மயங்கி விழுந்தும், அதில் ராமசாமி இறந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுகுறித்து துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்