வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் தேவாலயங்கள்
வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் தேவாலயங்கள்;
வால்பாறை
இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தேவாலயங்களும் வர்ணம் பூசப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தற்போது ஜொலிக்கிறது.
இயேசு கிறிஸ்து மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில் அனைத்து தேவாலயங்களிலும் மாட்டுக் குடில் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் கீத ஆராதனையோடு கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கி நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறப்பின் கிறிஸ்துமஸ் பாடல் மற்றும் திருப்பலி, சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்தவர்கள் செய்து வருகிறார்கள்.