போக்சோவில் தந்தை கைது

போக்சோவில் தந்தை கைது;

Update:2021-12-23 22:16 IST
அன்னூர்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் 10 வயது மகளுடன், கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் அவரது மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

உடனே அவளிடம், தாயார் விசாரித்தார். அப்போது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், அன்னூர் போலீசில் புகார் செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை லாரி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்