திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
தாளவாடியை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. மிகவும் குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த பாதையானது, திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இதனால் தினமும் இந்த மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் செல்லும் கனரக வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் பழுதாகி நிற்பதும், திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது.
பழுது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு நெல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியானது திம்பம் மலைப்பாதையின் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் வந்தபோது திடீரென பழுதாகி நின்றது. இதனால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது காலை 9 மணி அளவில் சரி செய்யப்பட்டது. இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது. திம்பம் மலைப்பாதையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.