பவானிசாகர் அருகே தோட்டங்களில் முகாமிட்ட யானைகள்; விவசாயிகள் அச்சம்

பவானிசாகர் அருகே தோட்டங்களில் முகாமிட்ட யானைகளால் விவசாயிகள் அச்சம் அடைந்தனா்.;

Update:2021-12-24 02:11 IST
பவானிசாகர்
பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து நேற்று 3 காட்டு யானைகள் வெளியேறி பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் நடமாடின. காலை நேரத்தில் தோட்டத்தில் காட்டுயானைகள் நடமாடுவதை கண்டதும், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்தனர். உடனே  அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘இரவு நேரங்களில் விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள், பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளன.
இதனால் ஆடு மற்றும் மாடு போன்றவற்றை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அவதிப்படுகிறார்கள். எனவே தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்துவிடும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்