போலீஸ் ஏட்டை ஹெல்மெட்டால் தாக்கிய வாலிபர் கைது
உணவை தாமதமாக கொண்டு வந்ததை கண்டித்ததால் போலீஸ் ஏட்டை ஹெல்மெட்டால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி செய்பவர் ஜார்ஜ் பீட்டர் (வயது 40). இவர், சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கிறார். ஆன்லைன் மூலம் கோழிக்கறி உணவுக்கு ஜார்ஜ் பீட்டர் ஆர்டர் செய்தார். உணவு கொண்டு வந்த ஊழியர் சற்று தாமதமாக வந்ததாக தெரிகிறது. உடனே ஏட்டு ஜார்ஜ் பீட்டர், உணவு கொண்டு வந்த ஊழியரை கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, உணவு கொண்டு வந்த ஊழியர், ஏட்டு ஜார்ஜ் பீட்டரை, தனது ஹெல்மெட்டால் அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் ஜார்ஜ் பீட்டர் ரத்த காயம் அடைந்தார். அவரது தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் கொ டுத்த புகார் அடிப்படையில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஜார்ஜ் பீட்டரை தாக்கி காயப்படுத்தியதாக ஆன்லைன் உணவு சப்ளை ஊழியர் கார்த்திக் வீரா (24) என்பவர் கைது செய்யப்பட்டார். ஏட்டு ஜார்ஜ் பீட்டர் குடிபோதையில் தன்னை தாக்கியதாக, கார்த்திக் வீராவும் புகார் கொடுத்துள்ளார்.