தீயணைப்புத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கும் வீடியோ

காஞ்சீபுரம் மாவட்ட கல்லூரிக்கு கட்டிட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் பெற, காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிலஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2021-12-24 17:50 IST
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு உயர் வகை கட்டிட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் பெற, காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரியை தனியார் மருத்துவ கல்லூரி பிரதிநிதி அணுகியுள்ளார். அப்போது தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் மண்டல துணை இயக்குனருக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறி, தீயணைப்புத்துறை அதிகாரி தனியார் மருத்துவ கல்லூரி பிரதிநிதியிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பேரம் பேசி முன்பணமாக ரூ.1½ லட்சம் கேட்டதாக தெரிகிறது. 

இவ்வாறு லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்