கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலியானாள்.
6 வயது சிறுமி
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு
திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பாலு. இவருடைய மகள் ரித்திகா (வயது 6).
இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது.
இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனை யில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
சிகிச்சை பலனின்றி பலி
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 22-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை குழந்தைகள் நல சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.