தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி
தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி;
கோவை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பேசும்போது, வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உதவி தேர்தல் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் கோவை மாநகராட்சியின் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையத்தின் புத்தகம் மற்றும் உள்ளாட்சிதேர்தல் விதிகள் 2006-ன் வழிமுறைகளின் படி இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக முத்தண்ணன் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.