பொதுமக்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே அரசு நிலத்தில் குடியிருந்த 58 குடும்பத்தினரை காலி செய்ய பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே அரசு நிலத்தில் குடியிருந்த 58 குடும்பத்தினரை காலி செய்ய வருவாய்த்துறையினர் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதையடுத்து அவர்கள் தங்களை வேறு இடத்தில் குடியமர்த்த கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களை செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி பகுதியில் குடியமர்த்த இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் அளவிடும் பணி நேற்று நடைபெற்றது. அதற்கு சென்னேரி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் செங்கல்பட்டு- திருப்போரூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சுவார்தை நடத்தி கலைந்து போகும்படி கூறினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.