இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி;
சுல்தான்பேட்டை
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து கோவையை சேர்ந்த கலைக்குழு மூலம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்றார். திட்டம் குறித்து மட்டுமின்றி பொது அறிவு, மனக்கணக்கு, விஞ்ஞானம் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் தாங்களாகவே முன்வந்து மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.