நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். சிலை-உருவப்படத்துக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது சிலை- உருவப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.;
ஈரோடு
ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது சிலை- உருவப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் ரா.மனோகரன், கே.சி.பழனிச்சாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால், வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், மாநகர பிரதிநிதி ஆஜம், நிர்வாகி பொன்சேர்மன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
அ.தி.மு.க.
இதேபோல் பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில் பெரியார் நகர் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் ரா.மனோகரன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பகுதி செயலாளர் ஜெகதீஷ், முன்னாள் கவுன்சிலர் நாச்சிமுத்து, நிர்வாகிகள் உதயகுமார், வேலு, அன்பழகன், துரைராஜ், ஜீவா மனோகரன், அரவிந்த், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
அ.ம.மு.க.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டம் சார்பில், ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் சக்தி என்கிற சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சுகுமார், தொழிற்சங்க பேரவை செயலாளர் சிவகுமார், இளைஞர் பாசறை செயலாளர் பிரதீப் என்கிற மணிகண்டன், இளைம்பெண் பாசறை செயலாளர் கலைச்செல்வி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் லெனின் வீரபாண்டியன், நெசவாளர் அணி செயலாளர் சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் தனவர்ஷன், அன்னபூரணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.