தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை;

Update:2021-12-25 19:10 IST

கோவை

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி  கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 நேற்று முன்தினம்நள்ளிரவு இயேசு பிறப்பதை விளக்கும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று கோவையில் பெரிய கடைவீதி புனித மைக்கேல் ஆலயம், 

திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், 

ரேஸ்கோர்ஸ் ஆல் சோல்ஸ், ரத்தினபுரி புனித சின்னப்பர் தேவாலயம், புரூக்பாண்ட் சாலையில் உள்ள சிரியன் சர்ச், கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். 

பின்னர் அவர்கள் ஒருவருக்கொரு வர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 

அக்கம்பக்கத்தினருக்கு கேக், பிரியாணி, இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.

 முன்னதாக தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேவாலயங்களில் பிரார்த்தனை நடந்தது.

மேலும் செய்திகள்