உர விற்பனை நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சி உர விற்பனை நிலையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சி.வி.நாயுடு சாலை பகுதியில் உள்ள தனியார் உர விற்பனை நிலையத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் உர விற்பனை நிலையத்தில் பொட்டாஷ் உரங்கள் அதிக விலைக்கும் மற்றும் வெளி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கடைகளில் உள்ள உரங்கள் இருப்பு குறித்து அவர் விவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்த திடீர் ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் சம்பத்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அறிவழகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.