வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையால் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. மேலும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2021-12-26 22:27 IST
வால்பாறை

தொடர் விடுமுறையால் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. மேலும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வருகை அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வந்து உள்ளதால், கோவை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா மையமான வால்பாறைக்கு சுற்றுலா வருகை அதிகரித்து உள்ளது. 

அவர்கள் அங்கு நிலவும் குளிர் பனிக்காலத்தை அனுபவித்து செல்கின்றனர்.குறிப்பாக முக்கிய சுற்றுலா தலங்களான கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை, நீரார் மற்றும் சோலையாறு அணைகளை கண்டு ரசிக்கின்றனர். 

தடையை மீறி குளியல்

தற்போது கூழாங்கல் ஆற்றில் போதிய தண்ணீர் இல்லை. எனினும் ஆற்றில் இறங்க போலீசார் தடை விதித்து உள்ளனர். அதை மீறி ஆற்றில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.

இது மட்டுமின்றி வால்பாறைக்கு இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர்கள் மலைப்பாதையில் அதிவேகத்தில் வருவதால் விபத்தில் சிக்கி வருகின்றனர். 

போக்குவரத்து நெரிசல்

இது தவிர நகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி சென்றதாலும், உள்ளூர் வாசிகள் வணிக நிறுவனங்களுக்கு முன்னால் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாலும் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை தடுக்க வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி போலீஸ் நிலையங்களில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்