தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர்.;

Update:2021-12-27 16:23 IST
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 27). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் உத்திரமேரூர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 லட்சத்தை வசூல் செய்துவிட்டு வந்தவாசியில் இருந்து பஸ் மூலமாக மதுரவாயல் சர்வீஸ் சாலையில் வந்து இறங்கினார். அங்கிருந்து தனது நண்பர் விக்னேஷ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். 

விக்னேஷ்குமாரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு தினேஷ் மட்டும் பணத்துடன் தனியாக மோட்டார் சைக்கிளில் வானகரம், ஓடமா நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தினேசை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்