குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-12-27 18:06 IST
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் மணிமங்கலம் மற்றும் ஒரகடம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களான குன்றத்தூர் தாலுகா, நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்த வாசு என்ற வாசுதேவன் (வயது 21), பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வசந்த் என்ற ஷார்ப் வசந்த் (21), வட்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (23) ஆகியோர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி 3 பேரை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்