சாலையில் விழுந்த ராட்சத மரம்

சாலையில் விழுந்த ராட்சத மரம்;

Update:2021-12-27 20:11 IST
கோவை

கோவை காந்திபுரம் ராமர் கோவில் வீதியில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத வாகை மரம் ஒன்று நின்றது. இந்த மரம் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக யாரும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்