பொழுதுப்போக்கு பூங்கா வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தனியார் பொழுதுப்போக்கு பூங்கா வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.;
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசின் சார்பில் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் பூந்தமல்லி அடுத்த பாப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வந்த பொதுமக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி அரை மணி நேரம் ஓய்வு எடுக்க வைத்த பிறகு பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்ல நுழைவு சீட்டு வழங்கப்பட்டது.
மேலும் தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றுகளை காண்பித்த பிறகே பொழுதுபோக்கு பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. அவருடன் சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.