ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; 2 பேர் பலி
ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; 2 பேர் பலி;
ஆனைமலை
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த முதலபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கோவிந்தாபுரம் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஆனைமலையை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக தெரிகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென கார்த்திக் மோட்டார் சைக்கிளும், சீனிவாசன் மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக்கும், சீனிவாசனும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.