பள்ளி மாணவன் வித்தியாசமான சாதனை
சென்னை திருவேற்காடு பகுதி பள்ளி மாணவன் வித்தியாசமான சாதனை படைத்தார். இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி பரிசு வழங்கினர்.;
திரு.வி.க. நகர்,
சென்னை திருவேற்காடு ராம் நகரைச் சேர்ந்த மதனகோபால்-நளினி தம்பதியின் இளைய மகன் ஹேமந்த் பாபு (வயது 10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். ஹேமந்த் பாபு தான் வித்தியாசமான சாதனையை படைக்க வேண்டும் என எண்ணினார். இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
தனது பள்ளி விளையாட்டு பயிற்சி ஆசிரியர் கார்த்திகேயன் ஆலோசனை மற்றும் உதவியுடன் பின்னோக்கி ஓடுவதற்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி ஹேமந்த் பாபு, அம்பத்தூர் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்து சாலையோரமாக என சுமார் 11.75 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி 50 நிமிடத்தில் பின்னோக்கியே ஓடிவந்து சாதனை படைத்தார்.
பள்ளி மாணவனின் இந்த வித்தியாசமான சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி பரிசு வழங்கினர்.