வாகன ஓட்டிகளிடம் ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள்

மாங்கரை சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் 'கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் மற்றும் டெய்லரிடம் யோகாசன பாய்களை பறித்த போலீஸ் ஏட்டு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.;

Update:2021-12-28 22:23 IST
துடியலூர்

மாங்கரை சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் 'கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் மற்றும் டெய்லரிடம் யோகாசன பாய்களை பறித்த போலீஸ் ஏட்டு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

யோகாசன பாய் தயாரிப்பு

கோவையை அடுத்த துடியலூர் ஆனைக்கட்டியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் உள்ளது. இங்கு உள்ள பெண்கள் வாழைநாரில் இருந்து யோகாசன பாய் தயாரிப்பு உள்ளிட்ட பணி களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வாழை நார் பாயின் ஓரங்களை தைப்பதற்கு சின்ன தடாகத் தை சேர்ந்த டெய்லர் அய்யப்பன் என்பவரிடம் கொடுத்து இருந்த னர். சம்பவத்தன்று அவர் யோகாசன பாய்களை தைத்து ஆனைக்கட் டிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார்.

சோதனைச்சாவடி

ஆனைக்கட்டி செல்லும் வழியில் மாங்கரை சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மாவோயிஸ்டுகளின் நடமாட்டம்,கேரளாவில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

அந்த சோதனைச்சாவடி அருகே அய்யப்பன் வந்த போது அங்கு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் யோகாசன பாய்களுக்கான ரசீது உள்ளதா? என்று கேட்டு உள்ளனர். அவர் தன்னிடம் அது போன்ற ரசீது இல்லை என கூறியதாக தெரிகிறது.

உடனே போலீசார் பில் ரசீது இல்லாமல் எந்த பொருளையும் கொண்டு செல்லக்கூடாது என்று கூறி ரூ.1,500 மதிப்பிலான யோகாசன பாய்களை அய்யப்பனிடம் இருந்து போலீசார் பறித்தனர். பின்னர் அய்யப்பனை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கூகுள் பே மூலம் லஞ்சம்

இது குறித்து ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மைய நிர்வாகி சவுந்தர்ராஜன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் விசாரணை நடத்தினார். இதில், அங்கு பணியில் இருந்த தடாகம் போலீஸ் நிலைய ஏட்டு முத்துசாமி என்பவர் அய்யப்பனிடம் யோகாசன பாய்களை பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து மாங்கரை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த தடாகம் போலீஸ்காரர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இது குறித்த விசாரணை அறிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

உடனடியாக இடமாற்றம்

இதைத்தொடர்ந்து யோகாசன பாய்களை பறித்த ஏட்டு முத்துசாமி கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு உடனடியாக இடமாற்றம் செய் யப்பட்டார். தடாகம் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் கோவைப்புதூர் போலீஸ் பட்டாலியனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 

அரசுத்துறையில் பணியாற்றுபவர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பு கூகுள்பே மூலம் போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்