உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் சாலை பணிகள்
உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் சாலை பணியை உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர் தொடங்கி வைத்தார்.;
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள ஜெயம் நகர், அரசன் நகர், ராஜா நகர், முத்து கிருஷ்ணா அவென்யு போன்ற பகுதிகளில் சாலை வசதி தேவை என உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் சாலை பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்திகுமார், உத்திரமேரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானசேகரன், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார், தலைமை் செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோரனூர் ஏழுமலை, உத்திரமேரூர் நகர செயலாளர் என்.எஸ்.பாரி வள்ளல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.